இந்தியா

நாடு முழுவதும் மார்ச் 31 வரை அனைத்து ரயில்களும் ரத்து!

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்களும் மார்ச் 31 வரை  ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும்  கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 332 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள், சிறப்பு ரயில்கள் என அனைத்து பயணிகள் ரயில்களும் மார்ச் 31 வரை ரத்து செய்யப்படுவதாகவும், சரக்கு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT