முகப்பு
இந்தியா

ம.பி. முதல்வர் யார்? மாலை 6 மணிக்கு பாஜக தேர்வு

மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளரை மாநில பாஜக இன்று (திங்கள்கிழமை) மாலை 6 மணிக்கு தேர்வு செய்கிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:15 PM
கோப்புப்படம்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளரை மாநில பாஜக இன்று (திங்கள்கிழமை) மாலை 6 மணிக்கு தேர்வு செய்கிறது. 

மத்தியப் பிரதேச பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட முடக்கத்தால் எம்எல்ஏ-க்களுக்கு பாஜக சிறப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வரும் எம்எல்ஏ-க்கள் ஆதரவாளர்கள் இல்லாமல் வரவேண்டும் அல்லது காணொலி காட்சி மூலம் வீட்டிலிருந்தபடியே கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார். 

மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வர் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பதவியேற்கலாம் என நம்பகத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கையில், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சிவராஜ் சிங் சௌஹான் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்றனர். ஒருவேளை சிவராஜ் சிங் சௌஹான் தேர்வு செய்யப்பட்டால், அவர் மாநிலத்தின் முதல்வராக 4-வது முறைாகப் பதவியேற்பார்.

முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற போதிய எம்எல்ஏக்களின் பலமில்லை என்பதை உணர்ந்த முதல்வர் கமல்நாத், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதையடுத்து, ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் அவர் வழங்கினார். முன்னதாக, அவரின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் லால்ஜி டாண்டன், அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரை காபந்து முதல்வராகப் பொறுப்பு வகிக்குமாறு கமல்நாத்திடம் கோரியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.