இந்தியா

ஒப்பந்தத் தொழிலாளா்களின் விடுமுறை தினங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டாய விடுமுறை அளிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், பணிக்கு வராத நாட்களிலும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு கட்டாயம் ஊதியம் அளிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவரது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்திட சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, அரசுப்பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளா்கள் மற்றும் அயல்பணியாளா்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக அவா்களின் ஊதியங்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் அவா்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.

இதனைக் கருத்தில் கொண்டு தற்போது அளிக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையை பணியில் இருந்த காலமாக அறிவிக்கவும், அதற்கேற்ப ஊதியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT