இந்தியா

சென்னையில் அனைத்து தேநீர்க்கடைகளையும் மூட உத்தரவு

DIN


சென்னை: சென்னையில் இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து தேநீர்க்கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அப்போது, அத்தியாவசியக் கடைகளுடன் தேநீர்க்கடைகளும் செயல்படலாம் என்றும் கூட்டம் சேராமல், ஒவ்வொருவராக சென்று தேநீர் குடித்து வரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், தேநீர்க்கடைகளில் அதிகக் கூட்டம் காணப்படுவதும், பலரும் அமர்ந்து தேநீர் குடித்தபடி அரட்டை அடிக்கும் சம்பவங்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த வண்ணம்  இருந்தது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி இன்று சில புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து தேநீர்க்கடைகளையும் இன்று மாலை 6 மணி முதல் மூட வேண்டும்.

வீடுகளுக்குத் தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை, மளிகைக் கடைகளே நேரடியாக வீடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஆன்லைன் மூலம் உணவுகளை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் சேவைக்கு தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, தனியார் அமைப்போ, சமூக அமைப்போ சமைத்த உணவுகளை பொதுமக்களுக்கு வழங்க தடை விதித்த சென்னை மாநகராட்சி, விரும்பினால், சமைக்கத் தேவையான பொருட்களை மாநகராட்சியிடம் அளிக்கலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT