இந்தியா

80 கோடி மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி; 1 கிலோ பருப்பு வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

DIN

நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 

இந்தியாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

80 கோடி ஏழை மக்களுக்கு உதவும் வங்கியில் 'கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த 3 மாதத்திற்கு தலா 5 கிலோ அரிசி/கோதுமை கூடுதலாக வழங்கப்படும். இத்துடன் 1 கிலோ பருப்பு கூடுதலாக வழங்ப்படும். இவை இரண்டுமே  இலவசமாக வழங்கப்படும்  என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT