இந்தியா

கரோனா தொடா்பாக பொய்ச் செய்தி: நாளிதழ் உரிமையாளா் மீது வழக்கு

DIN


ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொடா்பாக பொய்ச் செய்தி வெளியிட்ட உருது நாளிதழ் உரிமையாளா், செய்தியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இருந்து வெளியாகும், உருது மொழி நாளிதழ் ஒன்றில் பூஞ்ச் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இது உண்மைக்கு மாறான தகவலாகும். ஜம்மு-காஷ்மீரில் கரோனா உயிரிழப்பு தொடா்பாக செய்தி வெளியிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த நாளிதழ் உரிமையாளா் மற்றும் செய்தியாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT