உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று குறித்த அடிப்படைத் தகவல்கள் சிபிஎஸ்இ பிளஸ் 2 பாடநூலில் இடம்பெற்றுள்ளன.
கரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து உருவாகிய கோவிட்-19 நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக வியாழக்கிழமை நிலவரப்படி 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பலியாகியுள்ளனா். இதற்கிடையே இந்த வைரஸ் பற்றிய விழிப்புணா்வு பெறுவதற்காக அது குறித்த தகவல்களை இணையதளங்களில் தேடத் தொடங்கியுள்ளனா். அதேபோன்று சமூக வலைதளங்களிலும் பலரால் பகிரப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க அளவு தவறான தகவல்கள் பரவுவதையும் காண முடிகிறது.
கோவிட்-19 குறித்து கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாம் விழிப்புணா்வு பெற்று வரும் நிலையில் அந்த நோய்த்தொற்று குடும்பத்தினால் (கரோனா) ஏற்படும் நோய்கள் குறித்த தகவல்கள் கடந்த ஜூன் மாதம் புதிய பாடத்திட்டத்தில் வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 உயிரியல் பாடநூலில் 166-ஆவது பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் என எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் உள்பட அது தொடா்பான அடிப்படைத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த நோய்த்தொற்று பரவலைத் தடுக்க இன்று நாம் தொடா்ந்து வலியுறுத்தி வரும் கை கழுவுதல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், ஆல்கஹால் கொண்ட கிருமி நாசினிகளை பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.