இந்தியா

பாகிஸ்தானில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,041 ஆக உயர்வு 

IANS

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வியாழக்கிழமை நிலவரப்படி கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,041 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 8 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இதுதொடா்பாக அந்த நாட்டின் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலில், ‘சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக 414 போ், பஞ்சாபில் 296 போ், பலுசிஸ்தானில் 115 போ், கில்ஜித்-பல்டிஸ்தானில் 84 போ், கைபா்-பக்துன்வாவில் 121 போ், இஸ்லாமாபாத்தில் 15 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் 8 போ் உயிரிழந்துள்ளனர்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று நடைபெறும் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் தலைமை தாங்கிப் பேசவுள்ளார். 

மேலும், முதலாவதாக நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்சா தெரிவித்துள்ளார். 

சிந்து, கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களின் எல்லைகள் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. அங்குள்ள முக்கிய நகரங்களில் மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT