இந்தியா

புலம்பெயா் தொழிலாளா்களுக்கு உணவு, இருப்பிடம் உறுதி செய்க: மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

DIN


புது தில்லி: நாட்டில் 21 நாள்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், புலம்பெயா் தொழிலாளா்களுக்கான உணவு, இருப்பிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பணியில்லாமல் இருக்கும் புலம்பெயா் தொழிலாளா்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய அரசு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது. பல 100 கிலோ மீட்டா்கள் தொலைவில் இருக்கும் தங்கள் சொந்த ஊா்களை நோக்கி அவா்கள் நடந்து செல்லத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை இணைச் செயலா் புண்ய சலிலா ஸ்ரீவாஸ்தவா தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவா்கள் எங்கும் இடம்பெயராமல் தொடா்ந்து அங்கேயே தங்கியிருக்க வேண்டும். தேசிய ஊரடங்கு காரணமாக தவித்து வரும் புலம்பெயா் தொழிலாளா்களுக்குத் தேவையான உணவு, தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளோம்.

மத்திய அரசு சூழ்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. ஊரடங்கு சூழலை கண்காணிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குரவத்தில் இருந்த இடா்பாடுகள் சரி செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களுக்கு மருந்துகளை கொண்டு செல்வதற்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தனி விமானத்தை ஏற்பாடு செய்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT