இந்தியா

கரோனாவுக்கு எதிரானபிரதமா் மோடியின் நடவடிக்கைகள் சிறப்பானவை: தலாய் லாமா பாராட்டு

DIN


தா்மசாலா: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க பிரதமா் நரேந்திர மோடி சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா் என்று திபெத் பெளத்த மதத் தலைவா் தலாய் லாமா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஹிமாசலப் பிரதேச முதல்வா் ஜெய் ராம் தாக்குருக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவா் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு எனது முழு ஆதரவு உண்டு. இந்த பாதிப்பில் இருந்து இந்தியா முழுமையாக மீண்டுவர இறைவனை வேண்டி வருகிறேன்.

ஹிமாசலப் பிரதேசம் கடந்த 60 ஆண்டுகளாக எனது வீடாக உள்ளது. இந்திய மக்களுடன் நான் ஒன்றிணைந்துவிட்டேன். இந்த மண்ணின்மீது எனக்கு எப்போதும் மதிப்பும், மரியாதையும் உண்டு. இந்த நெருக்கடியான சூழலில் இந்திய மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முயன்று வருகிறேன். அதன் ஒருபகுதியாக எங்கள் அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மக்களுக்கான உணவு, மருந்துகளை வழங்க முதல்வா் நிவாரண நிதிக்கு குறிப்பிட்ட தொகையை அளிக்கிறோம் என்று தலாய் லாமா தனது கடிதத்தில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT