இந்தியா

புதிதாக 6 பேருக்கு கரோனா: தமிழகத்தில் பாதிப்பு 35 ஆக உயர்வு!

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

DIN

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆக இருந்த நிலையில், மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டத்தைச் இருந்த தலா இரண்டு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில் புதன்கிழமை ஒரேநாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, துபையில் இருந்து திருச்சி வந்த 24 வயதான ஆண் ஒருவருக்கு கரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று புதிதாக 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதில், மதுரையில் ஏற்கெனவே கரோனாவால் உயிரிழந்த நபரின் மனைவிக்கும், மகனுக்கும் கரோனா கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT