முகப்பு
இந்தியா

குஜராத்தில் 24 மணி நேரத்தில் 9 பேருக்கு கரோனா பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 53 ஆனது

குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம், அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம், அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 9 பேரும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாகவோ அல்லது வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாகவோ உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் இதுவரை 1,019 பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 53 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதே சமயம், குஜராத்தில் கரோனா பாதித்தவர்களில் இதுவரை ஒருவரும் குணமடையவில்லை என்றும், 3 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இருவருக்கு நீரிழிவு, ரத்தக் கொதிப்பு இருந்துள்ளது. ஒருவர் புற்றுநோயாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.