இந்தியா

கரோனா எதிரொலி: வாட்ஸ்ஆப் சேவை குறைப்பு; வாடிக்கையாளர்கள் அதிருப்தி

DIN

வாட்ஸ்ஆப்-இல் முன்னதாக 30 வினாடிகள் ஸ்டேட்டஸ் வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 15 வினாடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால்  மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் மக்களின் பொழுதுபோக்காக தொலைக்காட்சியும் மொபைலுமே உள்ளன. அதிலும் மொபைல் போனிலே மக்கள் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். மேலும், ஐ.டி நிறுவனங்கள் பல தங்களது பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் மொபைல் டேட்டா பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு பயன்படுத்தும் மொபைல் டேட்டா அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மொபைல் டேட்டாவை சிக்கனமாகப் பயன்படுத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தன.

இதைத்தொடர்ந்து, வாட்ஸ்ஆப் நிறுவனம் சர்வர் உள்கட்டமைப்பு வசதிக்காக ஸ்டேட்டஸ் விடியோவில் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, இதற்கு முன்னதாக 30 வினாடிகள் ஸ்டேட்டஸ் வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 15 வினாடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15 வினாடிகளுக்கு மேல் இருக்கும் விடியோக்களை ஸ்டேட்டஸ் வைக்க முடியாது. வாட்ஸ்அப் சர்வர் தங்குதடையின்றி இயங்கவும், சர்வர் உள்கட்டமைப்புகளில் டிராஃபிக்கை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், இது வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் இணைய சேவை குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT