இந்தியா

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அமைச்சரவை செயலாளர் விளக்கம்

DIN

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இன்று காலை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 29-ஆக உயா்ந்துள்ளது. 

நேற்று வரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 1,024 -ஆக இருந்த நிலையில், இன்று காலை இது 1,071 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இடம்பெயர்ந்து பணியாற்றி வருவோர் சொந்த ஊர்களுக்குப் படையெடுப்பதால், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளையும் மூடுமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 24ம் தேதி இரவு முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்று 6வது நாளை எட்டியுள்ளது.

இந்த நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமோ என்ற நாட்டு மக்களிடையே நிலவுகிறது.

இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா கூறியதாவது, இதுபோன்ற செய்திகளைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT