முகப்பு
இந்தியா

ஊரடங்கை மதிக்காத இளைஞர்களுக்கு தனிமை வார்டில் அளிக்கப்பட்ட தண்டனை

ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றித் திரிந்த இரு இளைஞர்களுக்கு ராஜஸ்தானில் வித்தியாசமான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 மார்ச், 2020 at 8:26 PM
வித்தியாசமான தண்டனை
பகிர்:

ஜெய்பூர்: ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றித் திரிந்த இரு இளைஞர்களுக்கு ராஜஸ்தானில் வித்தியாசமான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1251 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 32  பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ஆங்காங்கே விநோத தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

அந்தவரிசையில் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றித் திரிந்த இரு இளைஞர்களுக்கு ராஜஸ்தானில் வித்தியாசமான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் ஜுன்ஜூனு மாவட்டத்தில் உள்ள நாவல்கர் பகுதியில் திங்களன்று ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றித் திரிந்த இரு இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள் சப் டிவிஷனல் நீதிபதி முரளி லால் ஷர்மா முன்பு நிறுத்தப்பட்டனர்.    

நீதிபதி அவர்களளைப் பார்த்து, ‘இவர்கள் கரோனாவைக் கண்டு அஞ்சுவதாகத் தெரியவில்லை. எனவே இவர்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமை வார்டுகளை மூன்று நாட்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இரண்டு நாட்கள் சுத்தம் செய்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தார் செவ்வாயன்று எழுத்துப் பூர்வ மன்னிப்புக் கடிதம் கொடுத்ததையடுத்து, நீதிபதி அவர்களை அப்பணியில் இருந்து விடுவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.