இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 35,365; பலி 1,152 ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

DIN

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,365 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை  35,043 இல் இருந்து 35,365 ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,147-ல் இருந்து 1,152 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,065 பேர் குணமடைந்துள்ளனர். 

நாட்டில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில்10,498 பேரும்,  குஜராத்தில் 4,395 பேரும், தில்லியில் 3,515 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2,719 பேரும், ராஜஸ்தானில் 2,584 பேரும், தமிழகத்தில் 2,323 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT