இந்தியா

வெளிமாநிலத்தவரை சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க  மத்திய அரசு அனுமதி

பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க மத்திய உள் விவகாரத் துறை அமை

ANI

புது தில்லி: பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் மூலமாக வெளிமாநில மக்களை அனுப்பும் நடைமுறைகள் குறித்து மத்திய உள்விவகாரத் துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு மாநிலத்தில் இருந்து அனுப்பப்படும் வெளிமாநிலத்தவர்களை அனுப்பும் மாநிலமே பரிசோதிக்க வேண்டும். கரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் சொந்த ஊர் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சிறப்பு ரயில் இயக்கப்படும் ரயில் நிலையத்துக்கு, வெளிமாநிலத்தவர்களை அனுப்பும் மாநில அரசு தான் பேருந்துகள் மூலம் பிரிவு பிரிவாக அழைத்து வர வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் வரும் மக்களை பரிசோதனை செய்வது, அவர்களை தனிமைப்படுத்துவது போன்ற அனைத்தையும் அவர்களது சொந்த மாநில அரசே மேற்கொள்ள வேண்டும்.

சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது போன்ற விஷயங்களையும் அனுப்பும் மாநில அரசே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய உள் விவகாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT