இந்தியா

தில்லியில் ஒரே பட்டாலியனைச் சேர்ந்த 122 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கரோனா

PTI


புது தில்லி: தில்லியைச் சேர்ந்த ஒரே பட்டாலியனில் பணியாற்றி வந்த மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 122 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையில் கரோனா பாதிப்பு 122 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் தில்லியில் மயூர் விஹார் பிரிவு-மூன்றாவது பகுதியில் பணியாற்றி வந்த 31-வது பட்டாலியனைச் சேர்ந்த இந்த வீரர்கள் இருந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்த வீரர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஒரு சில வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 122 வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 100 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான வீரர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பதுதான்.

வாரத்தில் துவக்கத்தில் சிஆர்பிஎஸ் காவல் ஆய்வாளர் கரோனா பாதித்து மரணம் அடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மேலும் 12 பேருக்கு கரோனா உறதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த ஒட்டுமொத்த பட்டாலியனைச் சேர்ந்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எப்படி கரோனா தொற்று பாதித்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT