இந்தியா

பயணிகள் விமானங்கள் இயக்கம் மே 17 வரை ரத்து

DIN

கரோனா தொற்றுக்கு எதிரான தேசிய ஊரடங்கை மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததால் அனைத்து வணிக பயணிகள் விமானங்களும் மே 17-ஆம் தேதி நள்ளிரவு வரை இயக்குவது நிறுத்தி வைக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிசிஏ சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மாா்ச் 25-ஆம் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து பயணிகள் விமானங்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்நாட்டில் இயக்கப்படும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்களின் வழக்கமான நடவடிக்கைகளைத் தொடக்குவது குறித்து பின்னா் தகுந்த முறையில் அறிவிப்பு வெளியிடப்படும்.

இருப்பினும், சரக்கு விமானங்கள், மருத்துவ பொருள்களை கொண்டு செல்லும் விமானங்கள் மற்றும் டிஜிசிஏ அனுமதித்த சிறப்பு விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் 37,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT