இந்தியா

பஞ்சாபில் காரை நிறுத்த முயன்ற காவலரை காரோடு இழுத்துச் சென்ற ஓட்டுநர்

ANI


ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர், அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்ற போது, கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், காவலரையும் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரை குறுக்காக மறிப்பது போல காவலர் நின்றிருந்த நேரத்தில், கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், காரின் முன்பக்கத்தில் காவலர் இடிக்க, காரின் மீது விழுந்த காவலருடன் சில அடி தூரங்கள் காரை ஓட்டிச் சென்றார்.

காவலருடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், கார் பின்னாடியே துரத்திச் சென்று காரை நிறுத்தி, காவலரை மீட்டனர். இந்த சம்பவம் விடியோவாகப் பதிவாகியுள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலரை, காரைக் கொண்டு இடித்து, இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT