இந்தியா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.6,546 கோடி

DIN

கச்சா எண்ணெய் முதல் தொலைத்தொடா்பு வரையில் பல்வேறுபட்ட வா்த்தகத்தில் கோலோச்சி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 2019-20 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.6,546 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் குறைவாகும்.

பெட்ரோகெமிக்கல் வா்த்தகத்தில் ஏற்பட்ட சரிவால் இந்நிறுவனத்தின் ஜனவரி மாா்ச் காலாண்டு நிகர லாபம் மூன்று ஆண்களில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

உரிமைப் பங்கு வெளியீடு:

ரூ.53,125 கோடிக்கு உரிமைப் பங்குகள் வெளியிட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, உரிமைப் பங்கு வெளியீட்டின் விலை ரூ.1,257 ஆகவும், பங்கு பரிமாற்ற விகிதம் 1:15 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT