இந்தியா

ஆந்திரத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,583 ஆக உயர்வு

DIN

ஆந்திர மாநிலத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஆந்திரத்திலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:

ஆந்திரத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கர்னூலில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,583 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று மேலும் 47 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 488 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரத்தில் இதுவரை 33 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT