ராஜஸ்தானில் 3 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு: மேலும் 4 பேர் பலி
ராஜஸ்தானில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளதாக திங்கள்கிழமை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளதாக திங்கள்கிழமை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் 123 பேருக்குப் புதிதாகத் தொற்று பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதார கூடுதல் தலைமைச் செயலர் ரோஹித் குமார் சிங் கூறுகையில்,
திங்கள்கிழமை நிலவரப்படி ஜெய்ப்பூரில் கரோனாவுக்கு நான்கு பேர் இறந்ததாகவும், அந்த மாநிலத்தில் வைரஸ் தொற்று காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. ஜெய்ப்பூரில் மட்டும் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
ஜோத்பூர் (73), சித்தோர்கரில் (19), ஜெய்ப்பூரில் (12), பாலி (11), கோட்டாவில் மூன்று, ராஜ்சமண்டில் இரண்டு மற்றும் ஆல்வார், பிகானேர் மற்றும் உதய்பூரில் தலா ஒரு வழக்குகள் உள்பட 123 புதியதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார்.
மாநிலத்தில் தற்போது 3,009 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 923 மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 1,578 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஜெய்ப்பூரில் அதிகமாக 1,005 பேருக்கு நோய்த் தொற்று பரவியுள்ளது. ஜோத்பூரில் 705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிங் கூறியுள்ளார்.