இந்தியா

புலம்பெயரும் தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை: ரயில்வே விளக்கம்

புலம்பெயரும் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது. 

DIN

புலம்பெயரும் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பொது ஊரடங்கு வருகிற மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளி மாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் சில தினங்களுக்கு முன் அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து, பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதனால் மாநில அரசின் ஒப்புதலுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிறப்பு ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், 'நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 34 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு அதனடிப்படையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயிலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ரயிலிலும் பயணிகளுக்கு இடையே காலியான இருக்கைகள் உள்ளன. 

இந்த சிறப்பு ரயிலில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு இலவச உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது

ரயில்களில் தொழிலாளர்கள் பயணிப்பதற்கான கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்தளிக்கின்றன.  ரயில்வேயின் மொத்த செலவில் 15% மட்டும் மாநில அரசிடம் இருந்து பெறப்படுகிறது. எஞ்சிய 85% கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது. இதில், தொழிலாளர்களுக்கு டிக்கெட் விற்கப்படுவதில்லை. மாநிலங்கள் வழங்கிய பட்டியல்களின் அடிப்படையில் ரயில்களில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்' என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT