இந்தியா

கேரளத்தில் புதிதாக 3 பேர்; கர்நாடகத்தில் 22 பேருக்கு கரோனா

ANI

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவித்திருப்பதாவது, கேரளத்தில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 502 ஆக உள்ளதாகவும், தற்போது 37 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடத்தில் இன்று மாலை 5 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 331 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர், 29 பேர் மரணம் அடைந்துவிட்டனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT