முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் கரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி 

ராஜஸ்தானில் கரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

ராஜஸ்தானில் கரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் 3ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்த வைரஸால் 3900 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்துடன் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,836-லிருந்து 46,433-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானில் கரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 82ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் அங்கு இன்று புதிதாக மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் 14 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,099ஆக உயர்ந்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →