ஹூக்ளி: வெளி மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேரில் இருந்து சுமார் 1200 பேரை அழைத்துக் கொண்டு சிறப்பு ரயில் ஹூக்ளி வந்து சேர்ந்தது.
தன்குனி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தொழிலாளிகளுக்கு கையில் கிருமி நாசினி கொடுக்கப்பட்டது. பிறகு அவர்களது ஆடைகள் மற்றும் உடைமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு பிறகு அவர்களது வீடுகளுக்கு பேருந்து மற்றும் வேன்கள் மூலம்அனப்பிவைக்கப்படுவார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மனிதர்கள் மீது கிருமி நாசினியைத் தெளிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போதும் இந்த பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.