முகப்பு
இந்தியா

புணேவில் அடுத்த சில நாட்களுக்கு கரோனா பாதிப்பு கடுமையாக உயரும்

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு சில நாட்களுக்கு கரோனா பாதிப்பு கடுமையாக உயரும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:


புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு சில நாட்களுக்கு கரோனா பாதிப்பு கடுமையாக உயரும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 79 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,201 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, புணேவில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஐந்து பகுதிகளில் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மண்டல ஆணையர் தீபக் கூறுகையில், தற்போது நாள் ஒன்றுக்கு 600 முதல் 800 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை தீவிரப்படுத்தி ஒரு நாளைக்கு 800 முதல் 1000 ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புணேவில் மட்டும் 13 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவைகளில் 1,250 பேருக்கு பரிசோதனை செய்யும் அளவுக்கு தகுதியுடையதாக உள்ளது. இதனை 1,700 ஆக உயர்த்தும் வகையில், மேலும் இரண்டு தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்.

கரோனா அபாயப் பகுதிகளில் இருந்து மூதியவர்கள் வேறு இடங்களில் கொண்டு சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிருமி நாசினி மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.