ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியே எங்கும் செல்ல முடியாது, வெளியில் இருக்கும் யார் ஒருவரும் ஹைதராபாத் நகருக்குள் நுழையக் கூடாது, இதேபோல ரங்காரெட்டி, மெட்சல்-மல்காஜ்கிரி மற்றும் விகாராபாத் மாவட்டங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் இந்த நான்கு மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன. தெலங்கானாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் சந்திரசேகர் ராவ் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அதில், ஹைதராபாத் எல்லைகளை மூடி சீல் வையுங்கள். நகரின் எல்லைகளை பாதுகாக்க காவலர்களை நியமியுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஹைதராபாத் நகர் முழுவதும் பூட்டி சீல் வையுங்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.
அதே சமயம், ஆந்திர மாநிலம் கர்னூல் மற்றும் குண்டூர் மாவட்ட மக்கள் தெலங்கானாவுக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுமாறும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானவில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவது அனைத்தும் இந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் சந்திரசேகர் ராவ் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.