முகப்பு
இந்தியா

கரோனா அச்சுறுத்தலையும் தாண்டி அலுவலகம் திரும்ப ஆர்வத்தோடு காத்திருக்கும் ஊழியர்கள்: ஆய்வில் தகவல்

ஊரடங்கு முடிந்ததும், அலுவலகம் திரும்ப 93% ஊழியர்கள் ஆர்வத்தோடு காத்திருப்பதாவும், கரோனா தொற்று பற்றியெல்லாம் கவலையில்லை என்று தெரிவித்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:


மும்பை: ஊரடங்கு முடிந்ததும், அலுவலகம் திரும்ப 93% ஊழியர்கள் ஆர்வத்தோடு காத்திருப்பதாவும், கரோனா தொற்று பற்றியெல்லாம் கவலையில்லை என்று தெரிவித்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கரோனா பரவும், தொற்று பாதிக்கும் என்ற கவலைகளை எல்லாம் தாண்டி, சுமார் 93% ஊழியர்கள், ஊரடங்கு முடிந்ததும் அலுவலகம் திரும்ப ஆர்வத்தோடு காத்திருப்பதாக மைன்ட்மேப் அட்வான்ஸ் ஆராய்ச்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 560 ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வில், சுமார் 85 சதவீத ஊழியர்கள், தங்கள் அலுவலகம் அல்லது நிறுவனம் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிறுவனம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மார்ச்  மாதம் கடைசி வாரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சுமார் 40 நாட்களுக்கும் மேலாக ஏராளமானோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். எப்போது அலுவலகம் போவோம், இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்ற ஆவலோடு பலரும் காத்திருப்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஊரடங்குக்குப் பிறகான இயல்பு வாழ்க்கை என்பது, கணிக்கப்பட்டதை விடவும் அதிவேகமாகவே சீரடையும் என்று எதிர்பார்க்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.