புது தில்லி: கரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புத்த பூா்ணிமாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.
கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்கள், அந்த நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுவோா் உள்ளிட்டோருக்காக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகம் முழுவதும் தன்னலம் கருதாமல், பிறரின் நலனுக்காக உழைக்கும் அனைவரையும் பாராட்டுவது மிகச் சரியாக இருக்கும்.
கரோனா தொற்றில் இருந்து ஒவ்வொரு குடிமக்களையும் காக்க இந்தியா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு உதவி, இந்திய மக்கள் வலிமையுடனும், தன்னலம் கருதாமலும் ஒன்றுபட்டு உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சி என்பது எப்போதும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் மோடி தெரிவித்தார்.
மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் சா்வதேச பௌத்த கூட்டமைப்பு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகா் பிராா்த்தனை நிகழ்வில் உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள பௌத்த மதத்துறவிகள் மற்றும் அமைப்பின் தலைவா்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.