முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு: பாதிப்பு 3,453 ஆனது

ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. மேலும், புதிதாக 26 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிப்பு 3,453 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தானில் 1,450 பேர் கரோனாவால் பாதித்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,523 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார். 

வெள்ளிக்கிழமை அஜ்மீரில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 

கோடா (8), ஜெய்ப்பூர் (6), பாலி (5), அஜ்மீர் (2) ஜலவர் மற்றும் உதய்பூரில் தலா இரண்டு, அல்வாரில் ஒன்று என மொத்தம் 26 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூரில் அதிக அளவில் 1,117 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, ஜோத்பூரில் 842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.