முகப்பு
இந்தியா

நாளை முதல் பயணிகள் ரயில் சேவை: செயல்பாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

பயணிகள் ரயில் சேவை  மே 12 முதல் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படும் என்று இந்திய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. முதல் கட்டமாக தில்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவை

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

பயணிகள் ரயில் சேவை  மே 12 முதல் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படும் என்று இந்திய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. முதல் கட்டமாக தில்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவை தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில், பயணிகள் ரயில் சேவை தொடங்குவது குறித்து மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகம் புதிய இயக்க செயல்பாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

இதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (மே 11) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு பெற முடியாது என்றும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மத்திய உள் விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் செயல்பாட்டு நெறிமுறைகளில், பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ரயிலில் ஏறும் போதும், பயணம் செய்யும் போதும் சமூக இடைவெளியை நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்துப் பயணிகளும் பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்துப் பயணிகளுக்கும் ரயில் நிலையத்திலும், ரயிலில் பயணிக்கும் போதும் கையை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி திரவம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட தேசிய பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக மாா்ச் 25-ஆம் தேதி தேசிய அளவில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வெளி மாநில தொழிலாளா்களுக்காக கடந்த 1-ஆம் தேதி சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இவை சிறப்பு ரயில்களாகவே இயக்கப்படும். தில்லியில் இருந்து திப்ரூகா், அகா்தலா, ஹௌரா, பாட்னா, பிலாஸ்பூா், ராஞ்சி, புவனேசுவரம், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து தேவைக்கு ஏற்ப மேலும் பல நகரங்களுக்கு ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.

ஐஆா்சிடிசி வலைதளத்தில் மட்டுமே பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியும். ரயில் நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் தொடா்ந்து மூடப்பட்டு இருக்கும்.

நாடு முழுவதும் 20,000 ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சைப் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன. எனவே, ரயில் பெட்டிகளின் இருப்புக்கு ஏற்ப மேலும், பல நகரங்களுக்கு படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் கூறியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.