இந்தியா

வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை: ராஜஸ்தான்

DIN

ஜெய்ப்பூா்: ராஜஸ்தானில் மாவட்டத்துக்குள்ளேயும், பிற மாவட்டங்களுக்கும் அனுமதிச் சீட்டு இல்லாமல் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர இதர இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு எந்த அனுமதிச் சீட்டும் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில எல்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்களுடன் திங்கள்கிழமை நடத்திய ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பை முதல்வா் அசோக் கெலாட் வெளியிட்டாா்.

மேலும், மாநில அரசு சாா்பில் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளில், ‘வெளிமாநிலங்களில் இருந்து ராஜஸ்தானுக்கு வருவோா் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிப்பதில் மாவட்ட அதிகாரிகள் முடிவெடுக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மூன்றாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்கீழ் பல்வேறு தளா்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT