இந்தியா

கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்

DIN


மகாராஷ்டிரம், மும்பை, தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 1,026 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 24,427 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 53 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 921 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 426 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,781 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 28 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,313 ஆக உயர்ந்துள்ளது.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று மட்டும் 46 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT