இந்தியா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மன்மோகன் சிங்

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பினார். 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங்குக்கு நெஞ்சுவலி காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

87 வயதான அவருக்கு காய்ச்சல் இருந்ததால், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சிகிச்சை முடிந்த நிலையில் மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பினார். 

முன்னதாக, அவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT