வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி இல்லை
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி இல்லை என்றும் இது சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி இல்லை என்றும் இது சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு இந்தியா திட்டம் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விவரித்து வருகிறார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 6 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. இதுபற்றி தெரிவித்ததாவது:
"ஒப்பந்தப்புள்ளியைப் பெறுவதில் இந்தியாவின் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடுவது நியாயமற்ற போட்டியாக உள்ளது. எனவே, அரசு கொள்முதல் தொடர்பான ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. இதற்கான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இது 'சுயசார்பு இந்தியா' திட்டத்தை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கையாகும். அதேசமயம், உள்நாட்டு தயாரிப்புத் திட்டத்துக்கும் இது உதவும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவும்."