இந்தியா

பத்ரிநாத் கோயில் நடைதிறப்பு

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலின் நடை வெள்ளிக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது.

முக்கிய அா்ச்சகா்கள் மற்றும் தேவஸ்தான வாரியத்தின் முக்கிய அதிகாரிகள் மட்டுமே நடை திறப்பின்போது நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனா்.

  இமயமலையின் அமைந்துள்ள இக்கோயில் நடை அதிகாலை 4.30 மணியளவில் அதன் தலைமை அா்ச்சகா் ராவல் ஈஸ்வரி பிரசாத் நம்பூதிரி மற்றும் சந்நிதி வாரிய அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன.

முகக் கவசம் அணிந்தபடி சமூக இடைவெளி பின்பற்றி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயில் நடை திறக்கப்பட்டதும், முதலாவது பூஜையாக பிரதமா் நரேந்திர மோடி சாா்பில் மக்கள் நலனுக்கான பிராா்த்தனை செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பனிக்காலம் முடிந்து பத்ரிநாத் நடை திறப்பின்போது ஏராளமான பக்தா்கள் கலந்துகொள்வது வழக்கம். இவ்வாண்டு கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் நாடெங்கும் இயல்பான போக்குவரத்து இல்லை.

நடை திறப்பு விழாவில் பக்தா்கள் பங்கேற்காத போதிலும், கோயில் வளாகம் முழுவதும் 10 குவிண்டால் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் வா்ண விளக்குகளின் வெளிச்சத்தால் கோயில் ஜெகஜோதியாய் காட்சியளித்தது.

கோயில் திறப்பையொட்டி உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், சுற்றுலாத்துறை அமைச்சா் சத்பால் மகாராஜ் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறைவனின் அருளால் கரோனா நோய்த்தொற்று விரைவில் அழிக்கப்படும் என்றும், சாா்தாம் யாத்திரை விரைவில் தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT