இந்தியா

புகையிலை பொருள்கள் விற்பனைக்கும், பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும் தடை

DIN

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கும், பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்புவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக அனைத்து மாநில சுகாதார அமைச்சா்களுக்கும் அவா் கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

மெல்லும் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துபவா்களுக்கு வாயில் உமிழ்நீா் அதிகம் சுரந்து, பொது இடங்களில் எச்சில் துப்பும் நிலை உருவாகிறது. இது சுகாதாரமற்றச் சூழலை உருவாக்குவதோடு, கரோனா நோய்த் தொற்று பரவ காரணமாகிவிடும் அச்சமும் உள்ளது. மக்கள் அதிகம் கூடக் கூடிய சில்லறை விற்பனை நிலையங்களில்தான், இதுபோன்ற புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது.

வாயில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதையும், பொது இடங்களில் எச்சில் துப்புவதையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் (ஐசிஎம்ஆா்) ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்தது.

அதுபோல, மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் மே 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில், பொது இடங்களில் எச்சில் துப்புவது அபராதத்துக்குரிய தண்டனை எனவும், பொது இடங்களில் மது அருந்தவோ மற்றும் குட்கா, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்தவோ அனுமதியில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது.

அதனடிப்படையில், ராஜஸ்தான் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்கள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அந்த மாநிலங்களில் பொது இடங்களில் எச்சில் துப்பவும், வாயில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கும் தடை விதித்துள்ளன. அதுபோல, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் தடை விதிக்க முன்வரவேண்டும். இது தூய்மை இந்தியா இலக்கை மட்டுமின்றி, சுகாதாரமான இந்தியா என்ற இலக்கையும் எட்ட உதவும் என்று அந்தக் கடிதத்தில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT