இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 120 காவலர்களுக்கு கரோனா தொற்று: மொத்த பாதிப்பு 1,140ஆக உயர்வு

DIN

மகாராஷ்டிரத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் அதிக அளவிலான நோய்த்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 120 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,140ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 862 காவலர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 268 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,576 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,100ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அங்கு கரோனாவுக்கு இதுவரை 1,068 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT