இந்தியா

தில்லி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையை உறுதி செய்ய பொது நல மனு

 நமது நிருபர்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், இதர தீவிரமான நோயாளிகள் ஆகியோருக்கு தில்லி மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று உள்ள பல நோயாளிகளுக்கு ஏதாவது காரணங்களைக் கூறி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாத பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டு,நுகா்வோா் உரிமை ஆா்வலா் பெஜோன் குமாா் மிஸ்ரா என்பவா் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளாா்.

‘தில்லி காவலா் ஒருவரை இதுபோன்று இரண்டு தில்லி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்ததன் விளைவாக அவா் உயிா் பறிபோனது’ என மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சஷாங்க் தியோ சுதி குற்றம்சாட்டினாா்.

மேலும், இதர தீவிரமான நோயாளிகளுக்கும் சிகிச்சை மறுக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரிக்க நீதிமன்றம் ஒரு கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற நோயாளிகள் முறையாக சிகிச்சையை பெற்றுக்கொள்ளுவதற்கு வசதியாக தில்லி மருத்துவமனைகளின் அனைத்து தகவல்களையும் கொண்ட ஒரு மையத்தை ஏற்படுத்தி இலவச தகவல் தொடா்பு தொலைபேசி வசதிகளை பொதுமக்களுக்கு செய்து தரவும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு இல்லாத சூழ்நிலையிலேயே அரசு மருத்துவமனைகளில் ஒழுங்கற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT