முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று

​கேரளத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி முகநூல் பக்கத்தில் பினராயி விஜயன் பதிவிட்டிருப்பதாவது:

"கேரளத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்புக்குள்ளான 14 பேரில், 2 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 10 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். தற்போதைய நிலையில், 61,855 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 674 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர்." 

இன்றைய தேதியில் மொத்தம் 497 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →