4-ஆம் கட்ட பொது முடக்கம்: தடை செய்யப்பட்ட செயல்பாடுகள்
4-ஆம் கட்ட பொது முடக்கத்தில் தடை செய்யப்பட்ட செயல்பாடுகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
4-ஆம் கட்ட பொது முடக்கத்தில் தடை செய்யப்பட்ட செயல்பாடுகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் நாடு முழுவதும் பொது முடக்கம் காலத்தில் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்குத் தடை நீட்டிப்பு
- மெட்ரோ ரயில் சேவைக்கு தடை நீட்டிப்பு
- பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைக்கு தடை நீட்டிப்பு. இணையவழிக் கல்விக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- உணவகங்கள், விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு
- பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் செயல்படும் உணவகங்களுக்குத் தடை நீட்டிப்பு
- திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற் பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைப் பூங்காக்கள், மதுக்கூடங்கள் உள்ளிட்டவைக்குத் தடை நீட்டிப்பு. மைதானங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் செயல்பட அனுமதி, ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
- சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாச்சார மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் அதிகளவில் கூடும் கூட்டங்களுக்குத் தடை நீட்டிப்பு
- அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வழிபாடு சார்ந்த பிரார்த்தனைக் கூட்டங்களுக்குத் தடை நீட்டிப்பு. வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாடு நடத்த தடை நீட்டிப்பு