முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மகாராஷ்டிரத்தில் பொது ஊரடங்கு வருகிற மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அங்கு 30,706 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோரின் எண்ணிக்கை 1,135 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 7,088 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு மகாராஷ்டிரத்தில் இருப்பதால் அங்கு மேலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றுடன் (மே 17) மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் இம்மாத இறுதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →