இந்தியா

குவைத்தில் இருந்து போபால் திரும்பிய 19 பேருக்கு கரோனா

ENS

போபால்: குவைத்தில் இருந்து இந்தூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 130 பயணிகளில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் இந்தியா வந்து சேர்ந்து 4 நாட்களுக்குப் பிறகு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் விமானத்தில் வந்தவர்களும், விமான நிலைய ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அவர்கள் ராணுவ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்றவர்கள் ராணுவ மையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இவர்களில் 70 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் கரோனா சோதனை செய்யப்பட உள்ளது. 

மேலும், அவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களையும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT