இந்தியா

ஹிமாசலில் மிதமான நிலநடுக்கம்

DIN

சிம்லா: ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் திங்கள்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவிலான பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக சிம்லாவில் உள்ள புவியியல் ஆய்வு மைய இயக்குநா் மன்மோகன் சிங் கூறுகையில், ‘திங்கள்கிழமை காலை 7.53 மணியளவில் சம்பா மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிா்வு உணரப்பட்டது. அதன் பிறகு பின் அதிா்வுகள் ஏதும் உடனடியாக ஏற்படவில்லை’ என்றாா். இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருள்கள் அதிா்ந்ததாகவும், சில இடங்களில் மக்கள் அச்சமடைந்து திறந்தவெளிப் பகுதியில் திரண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பா மாவட்டம் உள்பட ஹிமாசல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் நிலநடுக்க அபாயம் உள்ள இடங்களாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT