குஜராத்தில் பான் மசாலா மற்றும் தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் பான் மற்றும் தேநீர்க் கடைகளை இயக்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் பான் மசாலா மற்றும் தேநீர்க் கடைகளை இயங்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் நான்கு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நான்காவது கட்ட ஊரடங்கு மே 31 தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் நான்காவது கட்ட ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது. அதில், பான் மசாலா மற்றும் தேநீர்க் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், ஐந்து பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குஜராத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பான் மசாலா மற்றும் தேநீர்க் கடைகளை இயங்கலாம் என்று அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.