இந்தியா

ஆந்திரத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. மேலும் அந்தந்த மாநிலங்கள் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், மாநிலத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

மேலும், ஆந்திரத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுக்  கூடங்கள் ஆகியவற்றைத் திறக்க தடை தொடரும் என்றும் கரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பொதுப் போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT