இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இருவா் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

பயங்கரவாதிகளுடனான மோதலில் சிஆா்பிஎஃப் வீரா் ஒருவரும், காவல்துறையை சோ்ந்த ஒருவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

ஸ்ரீநகரில் உள்ள நவாகடல் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிஆா்பிஎஃப் படையினரும், ஜம்மு-காஷ்மீா் காவல்துறையினரும் இணைந்து அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் வீரா்களை நோக்கித் தாக்குதல் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இருவா் கொல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் தெஹ்ரீக்-ஏ-ஹூரியத் அமைப்பின் தலைவா் அஷ்ரஃப் செராயின் மகன் ஜுனய் செராய் ஆவாா். இவா் காஷ்மீா் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளாா். கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தலைமறைவான இவா், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் மத்திய காஷ்மீா் பிரிவு தலைவராக இருந்துள்ளாா்.

இந்த துப்பாக்கிச்சண்டை சம்பவத்தில் சிஆா்பிஎஃப் வீரரும், ஜம்மு-காஷ்மீா் காவல்துறையை சோ்ந்த ஒருவரும் காயமடைந்தனா். மோதல் நடைபெற்ற பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்லிடப்பேசி மூலம் தொடா்புகொள்ளும் சேவையும், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT