இந்தியா

இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு: இந்திய ரயில்வே

ANI


ஜூன் 1-ஆம் தேதி முதல் துரந்தோ, சம்பா்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூா்வா எக்ஸ்பிரஸ் போன்ற 200 முக்கிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதற்கான போக்குவரத்து அட்டவணையை ரயில்வே வெளியிட்டுள்ளது. 

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. 200 ரயில்களில் தமிழகத்திற்கு ஒரு ரயில் சேவைக் கூட இல்லை என்பதுதான் வேடிக்கையாக உள்ளது. 

ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பதாவது, ஜூன் 1ம் தேதி முதல் தொடங்க உள்ள ரயில் சேவையில் முதல் 73 ரயில்களுக்கு மட்டும் சுமார் 1.49 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இவற்றில் பயணம் செய்ய 2,90,510 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை முன்பதிவு தொடங்கி இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த மாநிலம் செல்ல காத்திருக்கிறார்கள். ஏராளமானோர் சொந்த ஊரில் இருந்து பணிக்குத் திரும்ப தயாராக உள்ளனர்.

விரைவில் நிலைமை மாறுவதற்கு ஏற்ப மேலும் அதிக ரயில்கள் அறிவிக்கப்படும். ரயில் நிலையங்களில் கடைகளைத் திறக்கவும், அதில் பார்சல்கள் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்வதற்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அது தவிர 15 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயணிகள் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன.

இதனிடையே, ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து  ஏ.சி மற்றும் ஏ.சி. அல்லாத 2-ஆம் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்திருந்தார். அதன்படி, ஏசி வசதி அல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரயில்களுக்கான அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டது ரயில்வே துறை. அதில் தமிழகத்திற்கான எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT